நாட்டுப்பற்றாளர் நவரத்தினத்தின் நினைவேந்தல் யாழ் தீவகத்தில் அனுஷ்டிப்பு..!! - Yarl Voice நாட்டுப்பற்றாளர் நவரத்தினத்தின் நினைவேந்தல் யாழ் தீவகத்தில் அனுஷ்டிப்பு..!! - Yarl Voice

நாட்டுப்பற்றாளர் நவரத்தினத்தின் நினைவேந்தல் யாழ் தீவகத்தில் அனுஷ்டிப்பு..!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நாட்டுப்பற்றாளருமான  காவலூர் வி.நவரத்தினம் அவர்களின் 
நினைவுப்பகிர்வு இன்று யாழ் தீவகம் புளியங்குடல் பகுதியில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவுருவப்படத்திற்கு  கயேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கேற்றி வைத்ததுடன் கட்சி ஆதரவாளர்கள் மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர் வி.நவரத்தினம் அவர்களின் நினைவாக பயன்தரும் மரக்கன்றும் நாட்டப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன்,சட்டத்தரணி கொழும்பு தமிழ் சங்கத்தலைவரும் சட்டத்தரணியுமான ந.காண்டீபன்,பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post