இறுதிச் சுற்று பேச்சு ஆரம்பம்!! - Yarl Voice இறுதிச் சுற்று பேச்சு ஆரம்பம்!! - Yarl Voice

இறுதிச் சுற்று பேச்சு ஆரம்பம்!!தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் ஆசன பங்கீடுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நேற்றைய கலந்துரையாடலில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கட்சித்தலைவர்கள் மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இறுதி முடிவை எட்டுவதற்காக
கலந்துரையாடி வருகின்றனர

எந்த பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது, கூட்டணிக்கான பொதுப்பெயர், கூட்டணி ஒப்பந்தம் தொடர்பில் இதன்போது இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளது.

நாளை சனிக்கிழமை (14) கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்,
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,
சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வி.மணிவண்ணன், குருசாமி சுரேந்திரன், வி.பி.சிவநாதன், வ.பார்த்தீபன், வேந்தன்,துளசி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post