புதிய கூட்டு பேச்சுக்களில் தொடரும் இழுபறி!!! - Yarl Voice புதிய கூட்டு பேச்சுக்களில் தொடரும் இழுபறி!!! - Yarl Voice

புதிய கூட்டு பேச்சுக்களில் தொடரும் இழுபறி!!!



தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது.

ரெலோ புளொட் ஈபீஆர்எல்எப் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ்த் தேசிய கட்சி ஆகிய ஜந்து கட்சிகள் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் இக் கூட்டிலிருந்து நேற்று வெளியேறியிருந்த நிலையில் தற்போது வரை அவருடனான பேச்சுக்களும் தொடர்வதாகவே கூறப்படுகிறது.

எது எவ்வாறிருப்பினும் இன்னும் சில மணிநேரங்களில் இந்தப் புதிய கூட்டுக்கான கட்சிகள் மற்றும் சின்னம் என்பன தீர்மானிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post