மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை சமூகப் பாதுகாப்பைச் சபையின் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் நந்தகோபாலன் கௌரவ விருந்திரனாக சனச அபிவிருத்திவங்கி யாழ் பிராந்திய முகாமையாளர் லக்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 100 மாணவர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
15 மாணவர்களுக்கு 50,000ரூபாயும் 25 மாணவர்களுக்கு 25,000ரூபாவும் 60 மாணவர்களுக்கு 5000ரூபாய் வீதமும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் அதி கூடிய பயனாளிகளை இணைத்து கொண்ட மூன்று பிரதேச செயலகங்களுக்கும் அத்துடன் வழங்கப்பட்ட இலக்குகளை அடைந்த பிரதேச செயலகங்களுக்கும். பதில் அரசாங்க அதிபரால் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment