இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த 75 பஸ்கள் இன்று டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
கிராமப்புற வீதிகளின் நிலைமைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 75 நவீன பஸ்கள் டிப்போக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த பஸ்கள் டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இவ்வருடத்தில் (2023) பொது போக்குவரத்திற்காக 500 புதிய பஸ்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த பஸ்களை பரிசளிக்கும் போது தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment