அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!!! - Yarl Voice அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!!! - Yarl Voice

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!!!வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 
யாழ்ப்பாணம் நாவற்குழியில்  போராட்டமொன்று இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை(05)  ஏ9 வீதியின் நாவற்குழி சந்தியில் ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு
கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை
வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்
ஓரணியில் திரளச்செய்ய
ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள
08 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில்
கவனயீர்ப்பு  மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post