யாழ்ப்பாணம் – கோப்பாயில் இன்று காலை மூன்று வாகனங்கள் மோதியதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடிச் சந்திப் பகுதியில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கோப்பாய் உரும்பிராய் – நல்லூர் இராசபாதை இரண்டும் சந்திக்கும் பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த சந்திப் பகுதி ஆபத்தான சந்தியாக காணப்படுவதால் பல விபத்துச் சம்பங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment