கப்பல் சேவை இம்மாத இறுதிக்குள் ஆரம்பம்! பொருளாதாரத்தில் முன்னேற சாத்தியம் என்கிறார் ஜெயசேகரன்!! - Yarl Voice கப்பல் சேவை இம்மாத இறுதிக்குள் ஆரம்பம்! பொருளாதாரத்தில் முன்னேற சாத்தியம் என்கிறார் ஜெயசேகரன்!! - Yarl Voice

கப்பல் சேவை இம்மாத இறுதிக்குள் ஆரம்பம்! பொருளாதாரத்தில் முன்னேற சாத்தியம் என்கிறார் ஜெயசேகரன்!! கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.

இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் 

இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


* நீண்டகாலமாக வணிகர் கழகம் இவ் காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்திய இலங்கை அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனம் எதிர்வரும் சனிக்கிழமை 07ம் திகதி வணிகர்கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

*இதுவரையில் யாழ்ப்பாண வர்தகர்கள் இந்தியாவில் இருந்து கெழும்பு ஊடக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்தகளை தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.


*வட மாகாணத்தில் இருந்து தென்னை பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் இதேவேளை இந்தியாவினுடைய சந்தை நிலவரத்தை சரியாக அறிய வேண்டும் இந்தியா வர்த்தக சங்கங்கள் கூடி கலந்துரையாடி அது சம்பந்தமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியும்.

*நீண்ட காலம் எதிர்பார்த்த இந்த நிகழ்வு தற்போதைய காலத்தில் நடைபெற இருக்கின்றது அதை நாங்க இந்திய இலங்கை சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் முக்கியமா வர்தகர்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இதிலிருந்து முன்னேற வேண்டும் என்பதே வேண்டுகோள் ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

*தற்போதய அரசாங்கம் ஒரு சில பொருட்களுக்கான தடைகளை விதித்துள்ளது தடை செய்யாத பொருட்களை நாங்க இறக்குமதி செய்யலாம் அத்துடன் தடை செய்யாத பொருட்களுக்கான இறக்குமதி கட்டளைக்குரிய டொலர்களை அவர்கள் வங்கி மூலம் விடுகிறார்கள், தற்போது வந்திருக்கும் நடைமுறை தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமா தாலற்றப்பட்டு வருகின்றது பொருட்களுக்கான தடைகள் நீக்கப்பட்டும் வருகின்றது.


*இந்திய ரூபாயிலும் இனிமேல் இறக்குமதிகளை ஏற்றுமதியிலும் செய்யலாம் என்று பத்திரிகை மூலம் தகவல் வெளிவந்துள்ளது இலங்கை வங்கியானது இந்திய பணத்தின் மூலம் பரிமாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல் வங்கி அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.அதே மாதிரி இந்த ஏற்றுமதி இறக்குமதிலும் இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற தகவல் வழங்கப்பட்டது இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளுடன் அரசு அதிகாரியுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றோம் எனக்கும் அதே ஏற்றுமதி செய்யலாம் அதே நேரம் இந்திய ரூபாயிலும் ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம் என நினைப்பதாக தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post