யாழ் மாநகர முதல்வராக ஆர்னோல்ட்டின் நியமனத்திற்கு எதிராக மணிவண்ணண் வழக்கு தாக்கல்!!! - Yarl Voice யாழ் மாநகர முதல்வராக ஆர்னோல்ட்டின் நியமனத்திற்கு எதிராக மணிவண்ணண் வழக்கு தாக்கல்!!! - Yarl Voice

யாழ் மாநகர முதல்வராக ஆர்னோல்ட்டின் நியமனத்திற்கு எதிராக மணிவண்ணண் வழக்கு தாக்கல்!!!யாழ் மாநகர மேயர் ஆர்னோல்டின் நியமனத்திற்கு எதிராக முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் தரப்பினரால் சற்றுமுன் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணிவண்ணன் சார்பில்  சட்டத்தரணி குருபரன் வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.

 மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கு செய்யப்பட்டுள்ளதோடு நாளைய தினம் வழக்கு விசாரணை எடுக்கப்படவுள்ளது

தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது,  பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை,

அத்தோடு உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டு சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை போன்ற மூன்று விடயங்களுக்கு எதிராகவும் இன்றைய தினம் சட்டத்தரணி மணிவண்ணனால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post