வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மகிந்த பதவியேற்பு!! - Yarl Voice வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மகிந்த பதவியேற்பு!! - Yarl Voice

வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மகிந்த பதவியேற்பு!!வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை(09)
காலை 11.21  மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த மஹிந்த குணரட்ண வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post