புலிகளின் ஆயுதங்களை தேடி யாழில் அகழ்வு பணி ஆரம்பம்!! - Yarl Voice புலிகளின் ஆயுதங்களை தேடி யாழில் அகழ்வு பணி ஆரம்பம்!! - Yarl Voice

புலிகளின் ஆயுதங்களை தேடி யாழில் அகழ்வு பணி ஆரம்பம்!!



யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post