பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை - Yarl Voice பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை - Yarl Voice

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகைபொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை - செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் வரவேற்றார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) நேற்று இரவு நாட்டை வந்தடைந்தார்.

செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோர் வரவேற்றனர். 

ஸ்டீபன் ட்விக் அவர்களின் இலங்கை விஜயத்தில் அவருடன் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் மூலோபாய மற்றும் செயற்பாட்டுப் பிரதானி செல்வி எமில் டேவிஸ் அவர்களும் இனணந்துள்ளார். 

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் ஸ்டீபன் ட்விக் அவர்களின் இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post