தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் யாழில் ஆரம்பம் - Yarl Voice

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் யாழில் ஆரம்பம்ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கூட்டம் இன்று யாழில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரிற்கு அண்மையிலுள்ள மண்டபமொன்றில் முன்னைநாள் சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினரான கிஷோர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டு விசேட உரையாற்றினர்.

இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தென்மராட்சி தொகுதி ஒருங்கிணைப்பாளர் பரந்தாமன் எனப்படும் வழுதி உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தேர்தல் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post