கஜேந்திரன் எம்பியின் முன்மாதிரியான செயற்பாடு! - Yarl Voice கஜேந்திரன் எம்பியின் முன்மாதிரியான செயற்பாடு! - Yarl Voice

கஜேந்திரன் எம்பியின் முன்மாதிரியான செயற்பாடு!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையிலால் எரிபொருளை பெறுவதில் பெரும் இடர்பாடுகள் காணப்படுகின்றன QR முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது.

எனவே எரிபொருளை சிக்கனப்படுத்தும் முகமாக தான் மிதிவண்டியில் பயணம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொகுசு வாகனங்களிலும் மோட்டார் வண்டிகளிலும் பயணம் செய்யும் நிலையில் செல்வராசா கஜேந்திரன் மிதிவண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post