இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வடமாகாணத்திற்கான 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு 2023
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தின வடமாகாணத்திற்கான நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (04.02.2023) "நமோ நமோ தாயே நூற்றாண்டின் முதற்படி 2023- 2048" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது இன்று காலை பிரதம விருந்தினர் வருகையுடன் ஆரம்பமாகி தேசிய கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல் அணிவகுப்பு மரியாதை, அக வணக்கம், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை, பிரதம விருந்தினர் உரை, சான்றிதழ் வழங்குதல் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை மாணவர்கள்,சாரணர் படையணி,கலாசார படையணி, தேசிய மாணவர் படையணி ஆகிய படையணிகளின் அணிவகுப்பினைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது . இறுதியாக மரநடுகை நிகழ்வுடன் விழா சிறப்புற நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், யாழ். இந்திய துணைத்தூதரக தலைமை நிர்வாக அதிகாரி
ஸ்ரீமான் ராம்மகேஷ், யாழ்மாவட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர்,
யாழ்ப்பாண பிரதி பொலிஸ் அத்தியட்சகர்,51வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வடமாகாண சபை செயலாளர்கள், அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment