இலங்கையின் 75து சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ்த் தேசி மக்கள் முன்னணியினர் இன்று யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
75து சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகர்தின் முன்னிருந்து பேரணியாக எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிரதேச்செயலகம் முன்னிருந்து பேரணி ஆரம்பித்து, யாழ் மாவட்டச் செயலகத்தின் முன் வரை நகர்ந்த பேரணி, எதிர்ப்பு ஆரப்பாட்டமாக இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் ஆதரவாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment