மகளீர் உற்பத்தியும் விற்பனையும் கண்காட்சி யாழில் ஆரம்பித்து வைப்பு!! - Yarl Voice மகளீர் உற்பத்தியும் விற்பனையும் கண்காட்சி யாழில் ஆரம்பித்து வைப்பு!! - Yarl Voice

மகளீர் உற்பத்தியும் விற்பனையும் கண்காட்சி யாழில் ஆரம்பித்து வைப்பு!!






நிறை வாழ்வு மையத்தின் கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாணம் இனுவிலில் உள்ள நிறைவாழ்வு மையத்தின் தலைமையகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபையின் கீழுள்ள நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தின் திருநெல்வேலி கொக்குவில் ஆணைக்கோட்டை சண்டிலிப்பாய் இணுவில் ஆகிய ஜந்து இடங்களில் மகளீருக்கான பல்வேறு  பயிற்சிநெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மையத்தினால்  பெண்களுக்கான தையல் மணப்பெண் அலங்காரம் உணவு உற்பத்தி பொருட்கள் சாறிகளுக்கான ஆரி வேலைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அந்தந்த கிளைகளினூடாக வழங்கப்பட்டு வருகின்றதாக மையத்தின்  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பயின்று வருகின்ற மாணவிகளின் பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு தொடர்ந்து நாளையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







0/Post a Comment/Comments

Previous Post Next Post