தேர்தல் பற்றிய சிந்தனை இல்லாதவர் ரணில்!! யாழில் சஜித் குற்றச்சாட்டு - Yarl Voice தேர்தல் பற்றிய சிந்தனை இல்லாதவர் ரணில்!! யாழில் சஜித் குற்றச்சாட்டு - Yarl Voice

தேர்தல் பற்றிய சிந்தனை இல்லாதவர் ரணில்!! யாழில் சஜித் குற்றச்சாட்டுஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் சஜித் பிரேமதாசாவின் பங்குபற்றுதலோடு யாழ்ப்பாணம் றக்கா வீதியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றையதினம் பல்வேறு நிகழ்வுககளில் கலந்துகொண்டார்.

அந்தவகையில் இன்று மாலை றக்கா வீதியில் இடம்பெற்ற ஐக்கிய மகாகள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

சஜித் பிரேமதாசவுக்கு மலர்தூவி பாரம்பரியமான முறையில்  மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், மற்றும் யாழ்மாவட்ட அமைப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் நாட்டில் அனைவருக்கும் தேர்தல் பற்றிய நினைவு உள்ளது. எனினும் ஜனாதிபதி ரணிலுக்கு மாத்திரம் தேர்தல் பற்றி நினைவில் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மக்களுக்கு என்னாலான அபிவிருத்திபணிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் பல மாற்றங்களை செய்வேன். யாழ். மாவட்டத்திலுள்ள 10 தேர்தல் தொகுதிகளுக்கும் ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒரு பேரூந்து வீதம்  வழங்குவதற்கான உறுதிமொழி ஒன்றை எடுத்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.-

0/Post a Comment/Comments

Previous Post Next Post