தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் -வியாஸ்காந்த், சிராஸ், சமாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு- - Yarl Voice தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் -வியாஸ்காந்த், சிராஸ், சமாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு- - Yarl Voice

தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் -வியாஸ்காந்த், சிராஸ், சமாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு-இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடருக்கான குழாம்கள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத் தொடரில் யாழ்ப்பாண அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எல்.பி.எல் தொடரில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்ற இவருக்கு தற்போது முதற்தர உள்ளூர் போட்டியில் வாய்ப்பு கிட்டியுள்ளது.

விஜயகாந்த் வியாஸ்காந்த் யாழ்ப்பாண அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மொஹமட் சிராஸ் மற்றும் மொஹமட் சமாஸ் ஆகியோருக்கும் இம்முறை இடம் கிடைத்துள்ளன. மொஹமட் சமாஸ் மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் காலி அணியில் இடம்பிடித்துள்ளனர்.

உள்ளூர் கழகமட்ட பிரகாசிப்புகளை அடிப்படையாகக்கொண்டு, தேசிய சுபர் லீக்கிற்கான வீரர்கள் தெரிவுசெய்யப்படுவர். இவ்வாறன நிலையில் தொடரில் போட்டியிடும் கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் தம்புள்ள அணிகளுக்கான குழாம்கள் பெயரிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழாத்திலும் 23 தொடக்கம் 28 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஒவ்வாரு அணிகளுக்கும் மேலதிக வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.

உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்த வீரர்கள் மற்றும் தேசிய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் குழாம்களில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி கண்டி அணியில் லஹிரு குமார, சாமிக்க கருணாரத்ன, பெதும் நிஸ்ஸங்க, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் லசித் எம்புல்தெனிய போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண அணியில் பிரமோத் மதுசான், தனன்ஜய டி சில்வா, சதீர சமரவிக்ரம, பினுர பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post