யாழ்.மாவட்ட கரப்பந்தாட்ட சம்ளேனத்தின் ஏற்பாட்டில் 2 ஆவது தடவையாக நடைபெறவுள்ள யாழ்ப்பாண கரப்பந்தாட்ட தொடர் இன்று வியாழக்கிழைமை ஆரம்பமானது.
இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் ஏல முறையில் நடைபெறும் ஒரேயொரு கரப்பந்தாட்ட தொடரான யாழ்ப்பாண கரப்பந்தாட்ட தொடர், எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமைவரை நடைபெறவுள்ளது.
தொடரின் முதல் பருவகால போட்டிகள் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில், 2 ஆவது பருவகால போட்டிகள் இந்த ஆண்டு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை தொடரில் 9 அணிகள் மோதுகின்றது. இன்று வியாழக்கிழமை நடந்த முதல் போட்டியில் நடப்பு சம்பியனான அரியாலை கில்லாடிகள் 100 மற்றும் ஆவாரங்கால் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. அதனைத்தொடர்ந்து சங்கானை செலஞ்சர்ஸ் மற்றும் ரைசிங் ஐலண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதியிரந்தன.
இந்த அணிகளுடன் வல்வையூர் வொலி வொரியர்ஸ், மட்டுவில் ஸ்பைக்கர்ஸ், நீர்வை பசங்க, யுனிவர்சல் ஸ்டார்ஸ் புத்தூர் மற்றும் சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி ஆகிய அணிகள் தொடரில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment