எங்களையும் வாழ விடுங்கள்! இந்திய தூதரகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டம்! - Yarl Voice எங்களையும் வாழ விடுங்கள்! இந்திய தூதரகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டம்! - Yarl Voice

எங்களையும் வாழ விடுங்கள்! இந்திய தூதரகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 9:30 மணிக்கு மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற மீனவர்கள் துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post