மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியொன்று யாழ் நகரில் இன்று வியாழக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சுகாதார பிரிவினரால் இந்த விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கபட்டது.
யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது யாழ் நகர் ஊடாக யாழ்ப்பாண பிரதேச செயலகத்தை சென்று நிறைவடைந்த்து.
Post a Comment