யாழில் உருவாகும் பொம்மலாட்டம் எனும் புதிய படம்! - Yarl Voice யாழில் உருவாகும் பொம்மலாட்டம் எனும் புதிய படம்! - Yarl Voice

யாழில் உருவாகும் பொம்மலாட்டம் எனும் புதிய படம்!



யாழில் உருவாகி வரும் முழு நீளத் திரைப்படமான பொம்மலாட்டம் திரைப்படக்குழு இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியது.

குறித்த திரைப்படம் அதிகமாக யாழ் கலைஞர்களை வைத்து உருவாகியுள்ள அதேவேளை இன்பம் அரன்யாவின் ஆரணி படைப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

இத்திரைப்படம் குறித்து கருத்துத் தெரிவித்த திரைப்பட இயக்குனர் சசிகரன் யோ பொம்மலாட்டம் ஓர் உள்ளூர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இதன் முன்னோட்டம் எதிர்வரும் நவம்பர் 8ம் திகதி வெளியிடப்படவுள்ள அதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டு பின்பு ஏனைய மவட்டங்களில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் இப்படத்தில் சிறுவர்கள் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ள அதேவேளை அதிகளவு யாழ் கலைஞர்கள் பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

யாழில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் சம்பவங்கள் குறித்து குறிப்பாக சிறுவர்களின் கல்விப் பாரம் தொடர்பாக பொம்மலாட்டம் பேசுவதாக குறிப்பிட்டார்.

மேலும் இத்திரைப்படத்தில் நடித்த ஜஸ்னா பேசுகையில் படப்பிடிப்புத் தளம் இலகுவாக இருந்ததாகவும் இயக்குனர் சொல்வதை செய்யக்கூடியவாறாக இருந்ததாகவும் க்ளைமேக்ஸில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார்

மேலும் நடிகர் சுவிஸ் ரகு கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவில் சில படங்களில் நடித்துள்ளதாகவும் இங்கு அதிகமாக படங்களில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், யாழில் சிறுவர்கள் சொல்லொனாத் துயரங்களை யாழில் அனுபவித்து வருகிறார்கள். விளையாடக் கூடிய சூழ்நிலை இல்லை.
பெற்றோர்கள் சிறுவர்களுக்கு எதிராக துரோகம் இழைக்கின்றனர். இந்த விடயமே இத்திரைப்படத்தின் கதைக் களமாக இருக்கிறது. காலத்துக்கேற்ற வரப்பிரசாதமாக இந்தப்படம் வந்திருக்கிறது. பெற்றோர் திருந்த வேண்டும். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

ஆரணி படைப்பகம் சார்பாக உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஆரணி படைப்பகத்தின் இயக்குனர் ஓர் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியராக இருக்கிறார் 2005ம் ஆண்டு ஆரணி படைப்பகம் ஆரம்பஇக்கப்பட்டு 2025ம் ஆண்டு 10வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்நிலையில் பெருமுயற்சியாக இந்தத் திரைப்படம் தயாரிக்கப்படும் அதேவேளை தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் வெளியிடத் தீர்மானஇக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பட்டனர்.

மேலும்,பிள்ளைகளின் கல்விச் சுமை தொடர்பாக இந்த திரைப்படம் பேசுகிறது. இது வெற்றியளிக்கும் என்பதுடன் தாயகத்தில் இந்தத் திரைப்படத்துக்கு பெரு வரவேற்பு இருக்கும் என எதிர்பாக்கிறோம். அதிகமாக தாயக்க் கலைஞர்களுக்கும் புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் தாயக கலைஞர்களுக்கு ஆரணி படைப்பகம் சந்தர்ப்பம் வழங்குவதுடன் எமது கலைஞர்களுக்கு பேராதரவு  வழங்கத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post