இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கடந்த ஐனாதிபதித் தேர்தலில் கொள்கைப் பிரகடனத்தில் பல விடயங்களை தெளிவாக அனுர வெளியிட்டிருக்கிறார். எங்கள் கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு தேவையானதையும் தேவையில்லாதையும் கூட தெளிவாக கூறியுள்ளோம்.
இதனால் இப்போது சுமந்திரன் போன்றவர்கள் அல்லது வேறு யாரும் அப்படி இப்படி கூறுகின்றார்கள் என்ற எந்தக் கதையும் தேவையில்லை. ஏனெனில் நிச்சயமாக இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ள பல்வேறு விடயங்கள் இருக்கிற போது இங்குள்ள தமிழ்க் கட்சிகள் இப்போது எங்கள் மீது பல்வேறு போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள்.
அதில் முதலாவதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கப் போவதில்லையாம் என்றும் கஅதனை பரிசீலனை செய்யப் போகின்றோமாம் என்றும் கூறுகின்றனர். இப்படியெல்லாம் இந்தச் சட்டம் பற்றி இப்ப இவர்கள் கூறினாலும் அது நீண்டகாலமாக இருந்து வருகிறது.
அந்த சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக தமிழ் மக்கள் தான். ஆனால் கொண்டு வந்ததன் நோக்கம் தமிழர்களை மாத்திரமல்லாம் நாட்டிலுள்ள அனைவரையும் ஒடுக்குவதற்காகத் தான் உண்மையில் கொண்டு வரப்பட்டது.
அதனால் இதைக் கட்டாயம் ஒழிக்க வேண்டும். அதைத் தான் எங்கள் கொள்கைப் பிரகடனத்தில் கூட நாங்கள் முன்வைத்திருக்கிற எங்கள் கொள்கையாகும்.
ஆனால் அண்மையில் எங்களுடைய ஜானாதிபதி அலுவலக சட்டத்தரணி இதனை என்னமோ மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் இதனால் இதனை நாங்கள் மீள்பரிசீலனை செய்ய மாட்டோம் என்று கருதி எங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்ற போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது.
அவ்வாறு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்ற நபர்களில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் முதன்மை ஸ்தானத்தை வகிக்கின்றார்.
சில தினங்களிற்கு முன்னர் கூட என்னையே என்னென்னவோ எல்லாம் சுமந்திரன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.ஆக சுமந்திரன் அவர்களே நீங்கள சட்டத்துறையில் மகா கெட்டிக்காரர் தான். அதனால் உங்கள் மீது எங்களுக்கு ஓரு மரியாதை இருக்கின்றது.
ஆனாலும் நாங்கள் பல தட வைகள் சொல்லுகின்ற ஒரு விடயத்தை நீங்கள் கொச்சைப் படுத்துவீர்களாக இருந்தால் அது உங்களுக்கு நல்லதல்ல.
அதுமாத்திரமல்ல நாங்கள் சொல்லுகின்றவற்றை நீங்கள் உங்கள் வாயால் திரிவு படுத்துவீர்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம் கிடையாது.
ஏனென்றால் சுமந்திரன் அவர்களே நாங்கள் இன்றைக்கு சொல்லில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டுகின்ற அரசாங்கமாகும். அதனால் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நாங்கள் நீக்குவோம் என்று உறுதி மொழி வழங்கியிருக்கின்றோம்.
எனினும் அதற்கு தனித்து நடவடிக்கை எடுக்க முடியாது என்பது நிச்சயமாக எங்களுக்குத் தெரியும். எதிர்வரும் தேர்தலின் பின்னர் கூடுகின்ற அந்த பாராளுமன்றத்திலே நிச்சயமாக இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படுவதற்கான அல்லது இதுபோன்ற சட்ட மூலம் கொண்டு வரப்படுவதை இல்லாதொழிக்கின்ற நடவடிக்கையை எடுப்போம் என்று உங்களுக்கல்ல மக்களுக்கு உறுதி அளித்திருக்கிறோம். அதை நாங்கள் நிச்சயம் செய்வோம்.
அதனால் சுமந்திரன் சொல்கிறார் அல்லது வேற ஆட்கள் சொல்லுகிறார்கள் என்று
இது சம்பந்தமாக நாங்கள் கலக்கமடையவில்லை. ஏனென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரைக்குமான நான்கரை வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாவலர்களாக அதுமாத்திரமல்லாமல் இவர்களது ஆதரவில்லாவிட்டால் தோல்வி என்ற நிலைமை இருந்த்து.
அப்படியாக பேரம் பேசுகிற அதிகாரம் இருந்த போது இந்தச் சட்டங்களைப் பற்றி பேச முதுகெலும்பு இல்லாதவர்கள் நடவடிக்கை எடுக்க வக்கில்லாதவர்கள் இன்று எங்களைப் பார்த்து ஏதோ கூறுகின்றார்கள்.
அதனால் இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் ஓரு விடயத்தை சொல்லுகிறோம். ஏனென்றால் இங்கிருக்கிற தமிழ்க் கட்சிகள் இன்று தீர்வு நாள் தீர்வு பொங்கலுக்கு தீர்வு திபாவளிக்கு தீர்வு என்று சொல்லி சொல்லலிநே மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. சொல்வதை செய்து வருகிறோம் என்றார்.
Post a Comment