தலைவருக்கே தமிழ்த் தேசிய கட்சிகள் துரோகம்! எங்கள் வெற்றி மக்களால் உறுதி செய்யப்பட்ட வெற்றி! அங்கஜன் - Yarl Voice தலைவருக்கே தமிழ்த் தேசிய கட்சிகள் துரோகம்! எங்கள் வெற்றி மக்களால் உறுதி செய்யப்பட்ட வெற்றி! அங்கஜன் - Yarl Voice

தலைவருக்கே தமிழ்த் தேசிய கட்சிகள் துரோகம்! எங்கள் வெற்றி மக்களால் உறுதி செய்யப்பட்ட வெற்றி! அங்கஜன்



எமது ஆட்கள் சத்தமில்லாமல் வாக்கிடும் வேலையை செய்து நவம்பர் 14 இல் நாட்டுக்கு நாம் யார் என்பதை காட்டுவார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் மாபெரும் மக்கள் எழுச்சி தேர்தல் பிரசார கூட்டம் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன் போது உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நான் எங்கள் மக்களை கஷ்டப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது என நினைத்தேன். அதையும் தாண்டி மக்கள் இன்று இங்கு கூடியுள்ளனர்.

2020 எல்லாரும் என்ன சொன்னார்கள். வெற்றியாளர் என்ற கணக்கில் எம்மை சேர்ப்பதில்லை. அங்கஜனுக்கு ஆசனம் இல்லை என்றனர். ஆனால் எங்கள் ஆட்கள் சத்தமில்லாமல் வேலை செய்தார்கள்.

ஒரு சிலர் சில மாதங்களாக வேலை செய்கின்றனர். ஒரு சிலர் இரண்டு மாதங்களாக வேலை செய்கின்றனர். நாம் நான்கு வருடங்களாக ஒடிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் முடியவில்லை. நான் மீண்டும் வந்துள்ளேன். இன்னும் வேகமாக ஓடுவதற்கான ஆணையைக் கோர. 

போலி செய்திகளை வைத்து அரசியலில் எம்மை அகற்ற நினைத்தனர். 4 வருடத்தில் என்ன செய்தாய் என கேட்டார்கள். நான் என்ன செய்தேன் என்ற கணக்கறிக்கையை முழு விபரமாக முதல் பிரசார கூட்டம் தொடக்கம் வெளிப்படுத்தியிருக்கிறேன். இதுவரை வேறு யாராவது பாராளுமன்ற உறுப்பினர்கள் கணக்கறிக்கையை காட்டியிருக்கிறார்களா? செய்தால் தானே காட்ட முடியும்.

ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து பாராளுமன்றம் சென்றோம். இதில் அமைச்சு பதவிகளை எடுக்காமல் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை மாத்திரமே வைத்துக்கொண்டே நான் பல விடயங்களை செய்துள்ளேன்.

அங்கஜன் தனது அப்பாவின் பணத்தை கொண்டு வந்தாரா என சிலர் கேட்பார்கள். யாழ் மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தி செய்வதற்கு அப்பாவின் பணம் தேவையில்லை. மக்கள் பணமே போதுமானது.

 உங்கள் வரிப்பணத்தை உங்களுக்கு கொண்டுவருவதே பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை.ஆனால் வேலை செய்பவர்களையும் குற்றஞ்சாட்டிகாலம் காலமாக பேசிப் பேசியே செய்யும் அரசியல் மட்டும் இங்கு நடக்கிறது.

 இதனால்தான் எங்கள் மாவட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் குறைந்து, மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பனவும் குறைகிறது. இவர்களோ உணர்ச்சி வார்த்தைகளை மட்டும் காலத்துக்கு காலம் தூண்டி வாக்குகளை சூறையாட நினைக்கின்றனர்.

இந்த வருடம் சாகும் வரை ஒருவரை பாராளுமன்றில் வைத்து அழகு பார்த்தோம். ஆனால் அதனால் மக்களுக்கு என்ன நடந்தது? ஒன்பது ஏழாகி இன்று ஆறாகி விட்டது. மக்கள் மறுபடியும் மறுபடியும் ஏமாறுவார்கள் என்று நினைத்தே பலரும் வாக்கு கேட்கின்றனர்.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து விட்டு உரிமை மற்றும் தமிழ் தேசியத்தை பற்றி பேசலாம் என மக்கள் இப்போது சொல்கின்றார்கள். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்ற அடிப்படையில் நான் அன்றிலிருந்து செயற்படுகிறேன்.

எனக்கு முதலும் இங்கு சிலர் அபிவிருத்தி செய்தார்கள். அமைச்சராக இருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தற்போது நவீன தமிழ் தேசிய வாதம் பேசுகிறார்கள் என சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இங்கு பலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. சில வார்த்தைகள் மட்டும் அதில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

காலங்காலமாக ஒரே விடயங்களை மட்டும் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் இம்முறை அபிவிருத்தி பற்றி பேசுகிறார்கள். அப்படியென்றால் நான் செய்த அபிவிருத்திகள் சரி என்பதை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 

கடந்த காலத்தில் 22 பேர் பாராளுமன்றத்தில் இருந்தும் ஒன்றும் கிழிக்கவில்லை. தற்போது 22 ஆக பிரிந்து என்ன செய்ய போகிறார்கள். தலைவர் கட்சிகளை ஒன்றாக்கினால் இன்று அந்த தலைவருக்கு துரோகம் செய்துகொண்டு இங்குள்ள தமிழ்தேசிய கட்சிகள் செயற்படுகிறன. 

தங்கள் குடும்பத்திலும் அதிகாரத்திலுமே அவர்களுக்கு அக்கறை. பிரிந்து பிரிந்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். சுயநிர்ணயம் அவர்களால் கிடைக்கவில்லை. சுயநலன் மட்டுமே அவர்களிடம் உண்டு. 

வீட்டிலிருந்து சைக்கிள் முதலில் பிரிந்தது ஏன்? மக்களுக்காகவா? பதவிக்காக. இன்று குத்துவிளக்கு, சங்கு மான் ,பசு ,வண்டில் மாடு என பலர் வந்து இனி
எலி பூனை கரடி என்றும் பிரிந்து வருவார்கள். ஆனால் புலி எப்போது வெளிக்கிடுகிறதோ அப்போது இவர்கள் ஓடுவார்கள்.

நான் 435 கிராம சேவகர் பிரிவுக்கும் வந்திருக்கிறேன். உங்கள் ஊருக்கு வேறு எவராவது அரசியல்வாதிகள் வந்திருக்கிறார்களா? கட்சி கட்சி என்று பேசி பேசி கொள்கை கொள்கை என்று பேசி பேசி நோட்டிஸ் ஒட்டி 2000 சம்பளத்துக்கு துண்டுப்பிரசும் வழங்கி அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

மக்களுக்கு உண்மையாக இருந்தால் மக்களே பிரசாரம் செய்வார்கள்.
இவர்களுக்கு பயம். மக்களிடம் வர பயம். மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல அவர்களிடம் பதில் இல்லை. 

2020 இல் மக்கள் சத்தமில்லாமல்  ஒரு செய்தியை சொன்னார்கள். அதன் பின்னரே அபிவிருத்தி பற்றி பலரும் பேசுகின்றனர். வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் திருப்தியான அளவுக்கு நான் வேலை செய்துவிட்டேன். 

சமூக வலைத்தளங்களில் கருத்து போட்டு எனது வெற்றியை தடுக்கமுடியாது.
வெளிநாட்டில் இருந்து தமிழ் தேசியம் வளர்க்கிறார்கள். அவர்களாலும் முடியாது.

வடக்கில் 2022க்கு முன்னரே இடப்பெயர்வு இருக்கிறது. அதுக்கு அரசியல்வாதிகளே காரணம். உரிமையும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. ஒருவருக்கு வேலையும் எடுத்து கொடுக்கவில்லை.

 ஆனால் இப்போதும் மறுபடியும் சில  வெள்ளை வேட்டி புண்ணியவான் பாராளுமன்றம் செல்லும் கனவில் இருக்கின்றனர்.அங்கஜனுக்கு சாகும் வரை பாராளுமன்றில் இருக்கத் தேவை இல்லை. எனக்கு அரசியல் தொழிலில்லை. 

நான் படித்தவன் எனக்கு வேலைகள் செய்யத் தெரியும். நீங்கள்? பிச்சை எடுக்க கூட உங்களுக்கு தகுதி இல்லை.மக்களின் கஸ்டங்களை, யுத்த வடுக்களை, கண்ணீரை வைத்து பிழைப்பு அரசியல் செய்கிறீர்கள். 

வெட்கமாக இல்லையா?
மக்களே, வேலை செய்யாதவர்களை பாராளுமன்றம் அனுப்பி பயனில்லைநான் வேலை செய்திருக்கிறேன். எங்கள் அணியும் வேலை செய்யும். உங்கள் கிராமம் எங்கும் எங்கள் வேலைத்திட்டத்தை கொண்டு சேர்க்க நாங்கள் தயார்.

நவம்பர் 14ம் திகதி சத்தமில்லாமல் காரியத்தை முடிப்போம். யாழில் இரண்டு அணி உள்ளது. வேலை செய்த அணி. மற்றையது வேலை செய்வது போல நடித்து வேலை செய்யாமல் இருப்பவர்கள். நாங்கள் பட்ட கஷ்டங்களை அடுத்த தலைமுறையும் பட்டால் அதில் பயனில்லை. ஆகவே எங்கள் வெற்றி மக்களால் எப்போதோ உறுதி செய்யப்பட்ட வெற்றி. மீண்டும் உங்கள் அழைப்புக்காக நவம்பர் 15ம் திகதிவரை நான் காத்திருக்கிறேன். - என்றார்.
இந்நிகழ்வில் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட சக வேட்பாளர்கள்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ஜனநாயக தேசிய கூட்டணி தபால் பெட்டி சின்னத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் போட்டியிடுகிறது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post