பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (10.11.2024) கொட்டகலை சி.எல்.எப் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு வேட்பாளர்களுக்காக பரப்புரை முன்னெடுத்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷியா சிவராஜா நோர்வூட், கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களான ரவி குழந்தைவேல். ராஜமணி பிரசாத், திருமதி.செண்பகவள்ளி, ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கே.கே.பியதாச உள்ளிட்ட மாவட்ட வேட்பாளர்களும் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் இ.தொ.கா சார்பில் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Post a Comment