அரசியலமைப்பு விவகாரத்தை நான் இல்லாவிட்டாலும் கஜேந்திரகுமார் கையாளுவார்! சுமந்திரன் - Yarl Voice அரசியலமைப்பு விவகாரத்தை நான் இல்லாவிட்டாலும் கஜேந்திரகுமார் கையாளுவார்! சுமந்திரன் - Yarl Voice

அரசியலமைப்பு விவகாரத்தை நான் இல்லாவிட்டாலும் கஜேந்திரகுமார் கையாளுவார்! சுமந்திரன்




இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்...

புதிய அரசியலமைப்பு வரைபில் நானும் ஐயம்பதி விக்கிரம ரட்னவும்  முக்கிய பங்காற்றியிருக்கிறோம். ஆனால் அவரும் நானும் இந்த பாராளுமன்றத்தில் இல்லை. ஆனால் அவரும் நானும் இலங்கையில் தான் இருக்கிறோம். 

ஆகவே எந்தவிதமான பங்களிப்பு தேவைப்பட்டாலும் அப்படி தேவைப்படுகிற பங்களிப்பை நிச்சயமாக கொடுத்து உதவுவோம். 

தேசியப்பட்டியல் யாருக்கு

தமிழரசுக் கட்சிக்கான தேசியப் பட்டியல் தொடர்பில் தமிழரசின் மத்திய செயற்குழு கூடி முடிவு எடுக்கப்படும். அவ்வாறு சகல முடிவுகளும் எப்போதும் கட்சி முடிவாகவே எடுக்கப்படும். ஆகவே கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என்று நான் முன்கூட்டியே சொல்லல முடியாது. 

கட்சி உங்களை அழைத்தால் ஏற்றக் கொள்வீர்களா

எங்களது கட்சியை பொறுத்தவரையில் கட்சியின் முடிவே இறுதியாக இருக்கும். நான் கட்சியின் சகல முடிவுகளுக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன். ஆனால் இந்த விடயத்திலே நான் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். 

அதாவது மக்கள் முன்பாக வந்து  தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்வதை விரும்பவில்லை என்பதை தெளிவாகவே சொல்லலியுள்ளேன். ஆனாலும் என்னுடைய அரசியற் செயற்பாடு தொடர்ந்தும் இருக்கும்.

அரசியலமைப்பு விவகாரம் போன்ற விடயங்களில் உங்களது குரல் அல்லது பங்களிப்பு தேவை என்கிற போது மறுப்பதென்பது பாதிப்பாக அமையாதா?

அப்படியாக ஒரு குரல் இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிண் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். ஆகையனால் அவர் இந்தப் பணியை சிரம்மேல் ஏற்றுச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

கஜேந்திகுமார் பொன்னம்பலமும் ஒரு சட்டத்தரணி. நான் அரசியலுக்கு வருவதற்கு பத்து ஒருடங்களுக்கு முன்னரே அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்.

இந்த வரைபைக் குறித்து அவர் பலவிதமான விமர்சனக் கருத்தை எல்லாம் வைத்திருக்கிறவர். இதை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மக்களுக்கு விளங்கப்படுத்துறவர். ஆகையினாலே அவருக்கு அந்தப் பொறுப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர் அதைச் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். 

கட்சிகள் பிரிந்தது பாதிப்பா

எங்களுடைய கட்சி பிரதானமான தமிழ் கட்சியாக வடகிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எங்களோடு கூடப் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு எவரும் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. 

எங்களை ஆமோதித்திருக்கிறார்கள் அல்லது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற அடிபபடையில் எங்கள் கட்சி அந்தப் பொறுப்பை சரியான முறையில் செயற்படுத்தும். 

சிறிதரன் வெற்றி பெற்றுள்ளாரே. 

மிகப் பெரிய ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதிகளவான வாக்கையும் பெற்றுள்ளார். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களுடன் இணைந்து நாங்கள் உறுதுணையாக செயற்படுவோம்.

புதிய முகங்கள் என்ற மக்கள் தெரிவை எப்படி பீர்க்கிறார்கள்

மக்களுடைய தெரிவை நாங்கள் மதிக்கிறவர்கள். ஐனநாயக சூழலில் மக்கள் தான் இறுதியான தீர்ப்பை கொடுக்கிறவர்கள். ஆகையினாலே மக்களின் தீர்ப்பு எப்போதும் சரியீன தீர்ப்பு. கோட்டாவை கண்டு வந்த்தும் மக்கள் தான் விரட்டியதும் மக்கள் தான். ஆக மக்கள் செய்வது சரியானது. ஏன்றார்ர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post