ஜேவிபியை புறக்கணித்து தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானம் - Yarl Voice ஜேவிபியை புறக்கணித்து தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானம் - Yarl Voice

ஜேவிபியை புறக்கணித்து தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானம்



உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் இன்றையதினம் தனித்தனியாக சந்திப்பில் ஈடுபட்டனர்.

கந்தரோடையில் சித்தார்த்தனின் இல்லத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிடனான சந்திப்பும் நல்லூரில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுனான சந்திப்பும் நடைபெற்றது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் நடராஜர் காண்டீபனும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், வேந்தன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post