பொறுப்பு கூறல் சம்பந்தபட்ட விடயத்தில் சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டுமாக இருந்தால் எழுத்து மூலமாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்துவிட்டு அது கட்சியின் நிலைப்பாடு என கூறி தப்பிக்க முயலக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
யாழில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..
தமிழ் அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் என ஒருமித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வருகின்ற நிலையில் தமிழரசுக் கட்சி அதற்கு மாறாக இருக்கிறது.
தமிழர் தரப்பாக ஒருமித்து செயற்பட வேண்டிய இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி தாம் தனித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது.
தமிழரசுக் கட்சியில் எட்டு எம்பிக்கள் இருக்கின்றனர். தவிர்க்க முடியாத ஒரு தரப்பாகவும் அந்தக் கட்சி இருக்கிறது.
ஆனால் அந்தக் கட்சியில் மக்களால் ஏற்று கொள்ளாத தரப்புகள் மறைமுகமாக சிலதை செய்கின்றனர். அவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படாத தரப்புகள் அந்த கட்சியின் பெயரை பாவித்து தாம் நினைத்ததை செய்து வருகின்றனர்.
அதனை கட்சியின் நிலைப்பாடாக அறிவிக்கின்றனர். ஆகவே இருக்கின்ற எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தனியே கடிதமொன்றை ஜ.நாவிற்கு அனுப்பலாம் தானே.
அவ்வாறு எம்பிக்களாக செய்ய வேண்டியதை செய்யாமல் விடுட்விட்டு பின்னர் கட்சியின் நிலைப்பாடு என சொல்லகூடாது.
சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி முன்நகருகின்ற இந் நேரத்தில் கட்சி முடிவு தான் அதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை என கூறுவதில் அர்த்தம் இல்லை. ஆக சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இருக்க கூடாது என்பதை கூறி வைக்க விரும்புகிறேன் என்றார்.

Post a Comment