ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நடைபெற்றது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில்,
மாகாண சபைகளுக்கு பகிரப்பட்ட அதிகாரங்களும் வரையறைகளும் எனும் தலைப்பில் இணைந்த வட-கிழக்கு மாகாண முதல்வரின் செயலாளர், கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் பிரதம ஆலோசகர்
கலாநிதி க.விக்னேஷ்வரனும்,
மாகாண சபைகளுக்கு பகிரப்பட்ட நிதி அதிகாரங்களின் வீச்சும் எல்லையும் எனும் தலைப்பில்
முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ம.செல்வினும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியை நிறுவுதலின் முக்கியத்துவம் எனும் தலைப்பில்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர்
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும்,
மாகாணசபை முறைமை ஈழத் தமிழரின் நியாயமான அபிலாஷைகளுக்கான பயணத்தின் முதல் படிக்கல் எனும் தலைப்பில்
யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை
சிரேஷ்ட விரிவுரையாளர்
திருமதி.கோசலை மதனும் கருத்துரைகளை நிகழ்தினார்கள்.
இந்த நிகழ்வில் பல்வேறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ,பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் ,சிவில் அமைப்புபிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் ஒந்வுநிலை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

Post a Comment