![]() |
| யாழ்.பல்கலை மோதல் 4 சிங்கள மாணவர்களுக்க விளக்கமறியல் |
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4 ஆம்,3 ஆம் வருட சிங்கள மாணவர்களுக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை இரவு பலாலி வீதி கந்தர்மடப் பகுதியில் மோதல் ஏற்பட்டது.
இச் சம்பவத்தில் 3 ஆம் வருட மாணவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ஆம் வருட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தாக்குதல் நடத்திய 3 ஆம் வருட சிங்கள மாணவர்களை கைது செய்து யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் சிங்கள மாவர்கள் சார்பில் சட்டத்தரணி தோண்றி அவர்களுக்கான பிணை விண்ணப்பத்தினை செய்திருந்த போதும், தற்போது பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் சம்பவம் அதிகரித்துள்ளதை காரணம் காட்டிய நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Post a Comment