![]() |
| ஸ்விட்சர்லாந்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி |
அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்களின் தலைவர்களை இன்று சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு உரையொன்றினையும் நிகழ்த்த உள்ளார்.
அப்பேது இந்தியாவில் தெழில் ஆரம்பிக் சர்வதேச தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தாவேஸ் நகரில் நாளை நடைபெறும் உலக பெருளாதார அமைப்பின் 48வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ள பிரதமர் அதில் இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார்.
மேலும் ஸ்விட்சர்லாந்து அதிபர் Alain Berset மற்றும் ஸ்வீடன் பிரதமர் Stefan Lofven ஆகியேரைத் தனித்தனியே சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
1997ம் ஆண்டுக்குப் பிறகு உலக பெருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்து கௌ;ளும் முதல் பிரதமர் நரேந்திர மேடி என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment