விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு - Yarl Voice விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு - Yarl Voice

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு
விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு 
விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் இரண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பல் விடுதலைப் புலிகளின் தாயாரிப்பில் உருவாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் 'அங்கையற்கன்னி ' நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கிசெல்லும் சந்தர்ப்பத்தில் அதனுடைய மேற்பகுதி கடல்மட்டத்துடன் காணப்படும் என்று கூறப்படுகின்றது.

கடற்கரும்புலிகள் தமது இலக்கு நோக்கி நகரும்போது எதிர்ப்படைக்கு அது தெரியாதவகையில் இருப்பதற்காக அவர்கள் இவ்வாறு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தம் நடைபெற்று எட்டுவருடங்கள் கடந்த நிலையிலும் விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய போர்த்தளபாடங்களை புதுமாத்தளன் பகுதியில் இராணுவத்தினர் தற்பொழுதும் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post