9 ஆவது சர்வதேச வர்த்தக சந்தை 26, 27, 28 ஆம் திகதிகளில் - Yarl Voice 9 ஆவது சர்வதேச வர்த்தக சந்தை 26, 27, 28 ஆம் திகதிகளில் - Yarl Voice

9 ஆவது சர்வதேச வர்த்தக சந்தை 26, 27, 28 ஆம் திகதிகளில்

யாழ்.சர்வதேச வர்த்தக சந்தை தொடர்ந்து 9 ஆவது ஆண்டாகா இம்முறை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை யாழ்.மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

300 ற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை கொண்ட இச் சந்தையில் உள்ளுர் உற்பத்திகளுக்க போதியளவு முக்கியத்துவம் கொடுத்துள்ள அதே வேளை சர்வதேச உற்பத்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இம்முறை இந்தியாவில் உள்ள வர்த்தக தொழில்துறை மன்றங்களின் கூட்டாக உள்ள அசோக் சாம் அமைப்பின் இணைந்துள்ள 75 நிறுவனங்கள் இச் சந்தையில் நேரடியாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ் வர்த்தக சந்தையினை யாழ்.மாநகர சபை, இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் சர்வதேச வர்த்தக மன்றம் ஆகியவற்றிய் ஒத்துழைப்புடன், யாழ்.வர்த்தக மன்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து Lanka Exhibition &Conference Service (Pvt) Ltd (LECS)  நிறுவனம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்.இந்திய துணை தூதரகம், தேசிய ஏற்றுபமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் இந்தியாவின் ASSOCHAM ஆகின இந் நிகழ்வுக்க அனுசரணை வழங்கியுள்ளன.

இச் சந்தைக்கான நுழைவாயில் கட்டணமாக 40 ரூபா அறவிடப்படும். இருப்பினும் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை சீருடையுடன் வருகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கட்டணங்கள் எவையும் அறவிடப்படாது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post