இந்திய மீனவர்களின் மறியல் மீண்டும் நீடிப்பு - Yarl Voice இந்திய மீனவர்களின் மறியல் மீண்டும் நீடிப்பு - Yarl Voice

இந்திய மீனவர்களின் மறியல் மீண்டும் நீடிப்பு

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்தியமீனவர்கள் 13 பேரின் விளக்கமறியலில் மீண்டும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களின் வழக்கு விசாரணைககள் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. இதன் போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து மீனவர்களை விடுதலை செய்வதற்குரிய ஆலோசணைன கிடைக்கபெறவில்லை என நீரியல் வளத்துறை அதிகாரிகள் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

கைதான மீனவர்கள் அனைவரையும் தொடர்ந்து 14 நாட்கள் மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post