வேட்பாளரை தாக்கிய மேலும் இருவர் கைது - Yarl Voice வேட்பாளரை தாக்கிய மேலும் இருவர் கைது - Yarl Voice

வேட்பாளரை தாக்கிய மேலும் இருவர் கைது

வேட்பாளரை தாக்கிய  மேலும் இருவர் கைது
வேட்பாளரை தாக்கிய  மேலும் இருவர் கைது
புத்தூர் கலைமதி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் நேற்றுக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைதாகி நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
கைதானவர்கள் இருவரும் கலைமதி பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களை நேற்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்த மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் வழக்கை மார்ச் 5ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post