![]() |
| ரெண்டுமே ஒரே ஜானர் படங்களாச்சே... விஷால் மீது வருத்தத்தில் ரசிகர்கள்! |
இன்று கீ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கீ பட வெளியீட்டுக்காக தன்னுடைய இரும்புத்திரை படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தார் விஷால். விஷாலின் இந்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இரும்புத்திரை, கீ இரண்டு படங்களுமே ஒரே ஜானரில் அமைந்தவை. அதாவது ஹேக்கர் பற்றிய கதை. இரும்புத்திரை படத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய ஹேக்கராக அர்ஜுன் நடித்துள்ளார். ஹேக்கிங் மூலம் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்கும் ராணுவ மேஜராக விஷால் வருகிறார். இதேபோன்றது தான் கீ படமும். ஹேக்கர் தொடர்பான சைக்காலஜிக்கல் த்ரில்லர். இரண்டு படங்களுமே ஃபிப்ரவரி 9 அன்று வெளியாகவிருந்தன. திடீரென விஷால் கீ படத்துக்காக தன்னுடைய படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்துவிட்டார்.
இப்படி ஒரே மாதிரியான கதையில் அடுத்தடுத்த இரண்டு படங்கள் வந்தால் முதல் படத்துக்குதான் ரசிகர்களின் ஆதரவு இருக்கும்.
இரும்புத்திரை முதலில் பொங்கலுக்கு வருவதாக இருந்தது. அடுத்து ஜனவரி 26 என்றார்கள். பின்னர் ஃபிப்ரவரி 9 என்று மாற்றினார்கள்.

Post a Comment