![]() |
| சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்படும் -மாவை சேனாதிராஜா- |
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற யாழ்.மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
வரவு – செலவு திட்டத்தினை ஆதரிப்பதற்கான நான் அரசாங்கத்திடம் 2 கோடி ரூபா பணத்தினை இலஞ்சமாக பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிவசக்தி ஆனந்தன் பத்திரினை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அது பெய்யான கருத்தாகும். பொய்யான கருத்தினை வெளியிட்ட அவருக்கு எதிராக தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளேன். அதற்கான சட்டத்தரணிகளுடன் பேசியுள்ளேன்.
அமைச்சுப் பதவிகள் தருவதாக அரசு கூறிய போது அதனை நாங்கள் எடுக்கவில்லை. 2 கோடி இல்லை. இதற்கும் மேலதிகமான பணத்தினை ஒதுக்கீடுகளாக பெற்று மக்களுக்கான அபிவிருத்தினை செய்துள்ளோம். சிறு தொகைக்கு விலை போவபர்கள் நாங்கள் இல்லை என்றார்.

Post a Comment