யாழ்.ஆறுகால்மடம் - ஆணைக்கோட்டை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண் ஒருவரை அடித்து கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 5 பேர் மானிப்பாய் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியினைச் சேர்ந்த 22 வயதினை உடைய இளைஞர்களே மேற்படிக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரணை முடிந்த பின்னர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment