தொலைபேசியியை திருடியவர் கைது - Yarl Voice தொலைபேசியியை திருடியவர் கைது - Yarl Voice

தொலைபேசியியை திருடியவர் கைது

யாழ்.நகரப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் ஒன்றில் இருந்த 30ஆயிரம் ரூபா பெறுமதியான கைபேசியை திருடிய நபரை இன்று கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் கண்டி பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சுழிபுரம் பகுதியை சேர்;ந்த நபர் தனது வாகனத்தில் தனது கைபேசியை வைத்து விட்டு கடைக்கு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த குறித்த நபர் தொலைபேசியை திருடியிருந்தார் கடைக்கு சென்றவர் வந்து பார்த்த போது கைபேசி திருட்டு போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் அடிப்படையில் சந்தேக நபர் திருடிய தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post