தேர்தல் காலத்தில் கைதபவர்களுக்கு பிணை இல்லை நீதிபதி இளஞ்செழியன் அதிரடி - Yarl Voice தேர்தல் காலத்தில் கைதபவர்களுக்கு பிணை இல்லை நீதிபதி இளஞ்செழியன் அதிரடி - Yarl Voice

தேர்தல் காலத்தில் கைதபவர்களுக்கு பிணை இல்லை நீதிபதி இளஞ்செழியன் அதிரடி

தேர்தல் தொடர்பான வன்முறையிலே அல்லது சமூகவிரோ குற்றங்களில் யாரேனும் கைது செய்யப்பாடால் அவர் வேட்பாளாராக இருந்தாலும், வாக்காளராக இருந்தாலும் தேர்தல் முடியும் பிணை பிணை வழங்கப்படாது என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

யாழ்.மேல் நீதமன்றில் 54 கிலோ கஞ்ஞாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் பிணை விண்ணப்பத்தின் மீத இன்று நடைபெற்ற விசாரணையின் போதே நீதிபதி மேற்படி எச்சரிக்கையினை செய்துள்ளார்.
இக் காரணத்தை சுட்டிக்காட்டியதுடன் அந் நபரின் பிணை விண்ணப்பத்தையும் நிராகரித்திருந்தார்.

தேர்தல் காலத்தில் கொலை, கொள்ளை, வாள்வெட்டு  போன்ற சமூகவிரோத குற்றங்களுக்கு பிணை வழங்குவதானது தேர்தல் கால வன்முறைகளை அதிகரித்து விடும். எனவே பாரதுரமான எந்த குற்றத்திற்கும் தேர்தல் முடிவடையும் வரை பிணை வழங்கப்பட மாட்டாது.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகளானது பாரதுரமான முறையில் பதியப்படாத போதும் தேர்தல் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதால் ஒரு சில வாள்வெட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் பதவாகியுள்ளன.

இந்நிலையில் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்கு ஒத்துழைக்கும் வகையிலும், தேர்தல் ஆணையகம் நீதியான ஐனநாயக தேர்தலை நடாத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையிலும் நீதிமன்றங்கள் செயற்படும் என்றும் நீதிபதி தனது கட்டளையில் மேலும் குறிப்பிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post