தமிழகத்தில் தமிழ் மொழியில் பெயர்ப்பலகைகள் வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்து - Yarl Voice தமிழகத்தில் தமிழ் மொழியில் பெயர்ப்பலகைகள் வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்து - Yarl Voice

தமிழகத்தில் தமிழ் மொழியில் பெயர்ப்பலகைகள் வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்து


தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பைக் கூட தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லையென பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராமதாஸ்  மேலும் கூறியுள்ளதாவது

 'தமிழ் ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் தமிழ்நாட்டில் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது மகிழ்ச்சியளிக்கும் அதேநேரத்தில் கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயற்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில்தான் எழுதப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு கூட நிறைவேற்றப் படவில்லை என்றால் ஆண்டுதோறும் தமிழ் ஆட்சி மொழி வாரத்தை கொண்டாடுவது அர்த்தமற்றது.

பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றோஇ நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

அதன்பயனாக 1977ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆர் அடுத்த 50 நாட்களில்இ அதாவது ஓகஸ்ட் 8ஆம் திகதி அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் தமிழில்தான் எழுதப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில் 1948ஆம் ஆண்டு பெயர்ப்பலகைகள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 575 எண் கொண்ட அரசாணையை பிறப்பிக்கச் செய்தார்.

அதன்பின்னர் 1983-84ஆம் ஆண்டில் 1541 என்ற எண் கொண்ட அரசாணையை எம்.ஜி.ஆர் அரசும் 1989-90 ஆம் ஆண்டில் 291 என்ற எண் கொண்ட அரசாணையை கலைஞர் அரசும் பிறப்பித்தன.

இந்த 3 அரசாணைகளின் நோக்கமும் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் இவற்றில் ஒன்று கூட செயற்படுத்தப்படவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 25 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

ஆந்திரம் கர்நாடகம் கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில்இ கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அந்தந்த மாநில மொழிகளில் தான் எழுதப்பட்டு உள்ளன.

அதைத்தான் அந்த மாநில மக்களும் வணிகர்களும் பெருமையாக கருதுகின்றனர். ஆனால் உலகின் மூத்த குடி உலகின் மூத்த மொழி என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழகத்திலோ தமிழைத் தவிர மற்ற மொழிகளில் கடைகளின் பெயர்ப்பலகைகள் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறாததற்கு  முக்கிய காரணம் ஆட்சியாளர்களே ஆகும். இவர்கள் இவ்விடயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post