கொரோனோ தாக்கத்தில் இந்தியாவில் 3 பேர் உயிரிழப்பு, 150 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு - Yarl Voice கொரோனோ தாக்கத்தில் இந்தியாவில் 3 பேர் உயிரிழப்பு, 150 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு - Yarl Voice

கொரோனோ தாக்கத்தில் இந்தியாவில் 3 பேர் உயிரிழப்பு, 150 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

தற்போதைய நிலைவரப்படி 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவிற்கு வெளியே சுமார் 255 இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஈரான்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  இத்தாலி  குவைத்  ருவாண்டா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு  கொரோனா ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post