அமெரிக்க ஐனாதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீனா - Yarl Voice அமெரிக்க ஐனாதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீனா - Yarl Voice

அமெரிக்க ஐனாதிபதிக்கு கண்டனம் வெளியிட்டுள்ள சீனா


கொரோனா வைரஸை சீனா வைரஸ் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தமைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்து நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியபோது ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சீனாவின் கண்டனத்தைத் தொடர்ந்தும் கொரோனா வைரஸை 'சீனா' வைரஸ் எனத் தான் தெரிவித்தது மிகவும் சரியானதே என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும்இ அமெரிக்க இராணுவம்தான் கொரோனா வைரஸைப் பரப்பியதாகச் சீனா கூறுவது தவறு என்றும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளைஇ பொருளாதாரச் சிக்கலில் வேலையிழந்தவர்களுக்கு ஒரு இலட்சம் கோடி டொலர் நிதியுதவி வழங்கப்போவதாக இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ட்ரம்பால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஆயிரம் டொலர் காசோலையை நேரடியாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post