யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையலறையில் பாவனைக்கு உதவாத முறையிலிருந்து பழைய ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி மற்றும் பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களும் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் கடையின் பின்கதவு திறந்திருந்த நிலையில் குறித்த உணவகத்தில் குளிர்சாதனப்பெட்டியில் பாவனைக்குதவாத கோழி இறைச்சி மற்றும் காலங்கடந்த ரொட்டி மற்றும் மீன் போன்ற பல்வேறு உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் சோதனையிப்பட்ட போது குறித்த பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன அவை உடனடியாக அழிக்கப்பட்ட தோடு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment