கோட்டபாயவின் கருத்து குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக கருதப்பட வேண்டும் - மணிவண்ணண் - Yarl Voice கோட்டபாயவின் கருத்து குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக கருதப்பட வேண்டும் - மணிவண்ணண் - Yarl Voice

கோட்டபாயவின் கருத்து குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக கருதப்பட வேண்டும் - மணிவண்ணண்

காணாமல்போன சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை. என கூறுவது குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக கருதப்பட வேண்டும் என த.தே.மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் கூறியுள்ளர்.

ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி கூறியிருந்த கருத்த தொடர்பாக நேற்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும ;போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

உமா மகேஸ்வரன் போன்றவர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக பிரிவினைவாதத்தை உருவாக்கியதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். ஆனால் உமா மகேஸ்வரனுக்கு முன்பே 1976ல் வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடனம் செய்யப்பட்டது. என்பதை ஜனாதிபதி வரலாற்றை படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இந்த நாட்டில் பிரிவினை கோரும் மனோநிலை தமிழர்கள் விரும்பி எடுத்துக் கொண்டதல்ல, அந்நியர்கள் வெளியேறியதன் பின்னர் இந்திய தமிழர்கள் மீதும் இலங்கை தமிழர்கள் மீதும் ஒட்டுமொத்தமாக எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்கள் மீதும் திணிக்கப்பட் ட அடக்குமுறைகளும், நியாயமான அவர்களுடைய கோரிக்கைகளும்; இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டமையும், மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்செயல்களுமே காரணமாகும்.

இந்த வரலாற்றை ஜனாதிபதி அறியவில்லையா? அல்லது மறைக்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால் தெரியாவிட்டால் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை. என மீண்டும் கூறியிருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கண்கண்ட சாட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை இராணுவத்திடமும், முகாம்களிலும் ஒப்படைத்த சாட்சிகள் உயிருடன் இருக்கின்ற. அவற்றினடிப்படையில் அந்த சம்பவங்கள் இடம்பெற்ற காலத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு செயலாளராக இருந்த இப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை. என கூறுவது குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக கருதப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் சர்வதேச நீதி பொறிமுறை ஒன்றின் கீழ் இவர்கள் கொண்டுவரப்படவும் வேண்டும். மேலும் 2600 முறைப்பாடுகளில் 8 முறைப்பாடுகளில் மட்டுமே இராணுவத்திற்கு எதிராக உள்ளது. என கூறுகிறார். அது உண்மையாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறையில் உங்களையும், உங்கள் படையினரையும் நிறுத்துங்கள். யாருக்கு எதிராக அதிக முறைப்பாடுகள் உள்ளன என்பதை பார்க்கலாம் எனவும் மணிவண்ணன் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post