ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் ஊழியர்களுக்கு கடவுச்சீட்டு கிடையாது - மத்திய அரசு அறிவிப்பு - Yarl Voice ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் ஊழியர்களுக்கு கடவுச்சீட்டு கிடையாது - மத்திய அரசு அறிவிப்பு - Yarl Voice

ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் ஊழியர்களுக்கு கடவுச்சீட்டு கிடையாது - மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருதாலோ அல்லது விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலோ சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டை பெறுவதற்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அரசு ஊழியர் மீது ஏதாவது கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அவர் கடவுச்சீட்டை  பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ஊழியர் இந்தியாவைவிட்டு வெளியே சென்றால் அதனால் ஏதாவது ஒரு நாட்டுடன் இந்தியாவின் நல்லுறவு பாதிக்கப்படும் என்றாலோ அல்லது மனு செய்தவருக்கு கடவுச்சீட்டை  வழங்குவது பொதுநலன் சார்ந்ததாக இருக்காது என்று மத்திய அரசு கருதினாலோ அவருக்கு கடவுச்சீட்டு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post