கொரோனோ தொற்று குறித்து யாழ் போதனா வைத்தியசாலை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice கொரோனோ தொற்று குறித்து யாழ் போதனா வைத்தியசாலை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

கொரோனோ தொற்று குறித்து யாழ் போதனா வைத்தியசாலை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொரோனோ தொற்று குறித்து இன்று வரையில் வடக்கில் எவரும் அடையாப்படுத்தப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் பரவி வருகின்றது. இதற்கமைய இதுவரையில் 72 பேர் இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் சந்தேகத்தின் பேரில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் யாழ் போனதனா வைத்திய சாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமுதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு 10 பேர் வெளியேறியிருக்கின்றனர்.

அதே நேரம் சந்தேகத்தின் பேரில் தற்போதும் மூன்று பேர் அனுமுதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சத்திய மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு வெளியெறியவர்கள் தற்போது அனுமுதிக்கப்பட்டவர்கள் என வடக்கிலிருந்து இதுவரையில் எவருக்கும் கோரோனோ தொற்று அடையாளப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை தரவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் இதுவரையில் நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை என்றாலும் தொற்றுக்குள்ளானவர்கள் இப்பகுதியில் இருக்கமாட்டார்கள் என உறுதி செய்துவிட முடியாது.

ஆகவே பொதுமக்கள் அரசாங்க மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post