மனிதநேய பணியாளர்கள் தாக்கப்பட்டதற்கு சைவ மகாசபை கண்டனம் - Yarl Voice மனிதநேய பணியாளர்கள் தாக்கப்பட்டதற்கு சைவ மகாசபை கண்டனம் - Yarl Voice

மனிதநேய பணியாளர்கள் தாக்கப்பட்டதற்கு சைவ மகாசபை கண்டனம்

அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார்இ சைவ மகா சபையின் உப தலைவர்களில் ஒருவரான த.சிவரூபன் ஆகியோர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலைய பணியாளர்களால் திட்டமிட்டு தாக்கப்பட்ட சம்பவத்தை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (16) விழிப்புணர்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் மற்றும் த.சிவரூபன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை கண்டித்து சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ

கொரோனா வைரஸ் காரணமாக இன்று உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்திருக்கின்ற நேரத்தில் எமது தேசத்திலும் இதன் தாக்கம் மக்களை பயப் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துச் செல்கின்றது.

இதில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த வைத்தியர் நந்தகுமார் மற்றும் சிவரூபன் ஆகியோர் திட்டமிட்டு தாக்கப்பட்டிருக்கின்றனர். றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையப் பணியாளர்களால் இத்தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

ஆன்மீகஇ சமூகஇ மனிதநேயப் பணியாளர்களான இவர்கள் தாக்கப்பட்டுள்ளமை மானுடத்தை நேசிக்கும் அனைவருக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.

மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள  வைத்தியர் ஒருவரை பொது வெளியில் தாக்கியமை குறித்து தாக்குதலில் ஈடுபட்டவர்களும் அதை தூண்டியவர்களும் வெட்கப்படவேண்டும்.

வைத்திய கலாநிதி நந்தகுமார் சிறு வயதில் இருந்தே ஆன்மீக சமூக மனிதநேயப் பணிகளில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வருகின்றார். தனியே ஒரு மருத்துவனாக இல்லாமல் எமது தேசத்தின் தொன்மைகளை – சைவத் தமிழ்ப் பண்பாடுகளை - மீட்டெடுக்கும் பெரும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார். இவரது நண்பனான சிவரூபனும் இதே பணிகளில் தம்மை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

அன்பே சிவம் என்ற தாரக மந்திரத்திற்கு இணங்க மனிதத்தை நேசிக்கும் இறை சிவனின் தொண்டர்களான இவர்கள் மீதான தாக்குதலானது எமது தேசத்தில் மனிதாபிமானம் செத்துக்கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பொதுமக்களின் மீது எத்தகைய அக்கறையோ மனிதாபிமானமோ இன்றி வியாபாரத்திலும் பணம் உழைப்பதிலும் குறியாக இருப்போரின் இந்தத் தாக்குதலை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாக கண்டிக்கின்றது – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post