கொரோனோ பாதிப்பு தொடர்பாக ஆராய யாழ் போதனா வைத்தியசாலைக்கு அங்கஐன் நேரடி விஐயம் - Yarl Voice கொரோனோ பாதிப்பு தொடர்பாக ஆராய யாழ் போதனா வைத்தியசாலைக்கு அங்கஐன் நேரடி விஐயம் - Yarl Voice

கொரோனோ பாதிப்பு தொடர்பாக ஆராய யாழ் போதனா வைத்தியசாலைக்கு அங்கஐன் நேரடி விஐயம்

அண்மை காலமாக ஊடகங்களில் வடபகுதி மக்களிடம் கொரோனா தொற்றை கையாழ யாழ் போதனா வைத்தியசாலை தயாரா என மக்கள் மத்தியில் பீதி காணப்பட்டமையால் இதுபற்றி ஆராய்வதற்கு இன்று (19) யாழ் போதனா வைத்தியசாலைக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இவ் விஜயத்தின் போது யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ச. சத்தியமூர்த்தி பிரதி பணிப்பாளர் னச. யமுனாநந்தா மற்றும் ச. சிவபாதமூர்த்தி அவர்களை சந்தித்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலவரம் மற்றும் மாவட்ட மட்ட நிலைமைகள் பற்றி ஆராய்ந்தார்.

தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தபட்டு தயார் நிலையிலுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளருக்கான பிரத்தியேக விடுதியையும் நோய் தொற்று ஏற்பட்டால் தேவையான வசதிகள் உள்ளனவா என்பதையும் நேரடியாக பார்வையிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலையில் இதுவரையும் கொரோனா நோய் என்ற சந்தேகத்தின் பேரில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் ஐவர் வெளியேறிவிட்டனர் மீதியுள்ள மூவரில் அவர்களது
பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களுக்கும் நோய் தொற்று இல்லையாயின் அவர்களும் வெளியேறி விடுவார்கள் என தெரிவித்தார்.

அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களும் இந் நோயை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களின் மருத்துவ அறிக்கை வரும் வரை தங்கியுள்ளார்கள்.
இப்போதைய நிலைமையில் அவர்களுக்கு தேவையான போதிய வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளது. கொரோனாக்கான விடுதி 20 படுக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது.

கொரோனா நோய் என உறுதிசெய்யப்பட்டால் தனியான அறை வசதிகளும் செய்யப்பட்டு பாராமரிக்கப்படும். வட மாகாணத்தை பொறுத்தவரையில் இதுவரை நோய்தொற்று அறியப்படாமையால் மக்கள் எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை.

வடபகுதி மக்கள் சுகாதார அமைச்சுஇ உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) போன்றவை கூறும் முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகள் (ஒன்று கூடல்இஒருவர் மற்றவருக்கு அருகில் செல்வதை தவிர்த்தல்இ பிறரை தொடுவதை தவிர்த்தல்இ அடிக்கடி கைகழுவுதல்இ பொது நிகழ்ச்சிகளை தவிர்த்தல்) போன்றன மூலம் ஒரு சிலரிடம் இவ் வைரஸ் கிருமி காணப்பட்டாலும் பரவுவதையும் தொற்றுவதையும் தவிர்க்க முடியும்.

அதே வேளை பொதுமக்கள் எதற்கும் அச்சமடைய தேவையில்லை. மத்திய சுகாதார அமைச்சு எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தருகின்றனர். நாங்கள் எச்சந்தர்பத்திலும் தயார் நிலையிலேயே உள்ளோம். நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களை பரிசோதிக்கவும் பாராமரிக்ககூடிய நிலையிலேயே உள்ளோம்.

வைத்தியசாலை உயர்மட்ட குழு கூட்டம் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை கூட்டி கலந்துரையாடி வருகிறோம். மக்களின் ஐயங்களை தெளிவுபடுத்த அவசர தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துள்ளனர்

எதுவிதமான ஐயங்கள் இருந்தாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். வடபகுதியை பொறுத்த வகையில் மிகுந்த கரிசனையோடும் அவதானத்தோடும் இருக்கின்றோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன் அவர்கள் அண்மை காலமாக ஊடகங்கள் வடபகுதி மக்களிடம் கொரோனா தொற்று வந்தால் யாழ் போதனா வைத்தியசாலை தயாரா என மக்களின் சந்தேகத்திற்கும் பயத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் இவ் விஜயத்தின் போது கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் போதனா வைத்தியசாலை எப்போதும் தயாராகவே உள்ளது என்பதை நேரடியாக உறுதி செய்து கொண்டு வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் மக்கள் பயப்பட தேவையில்லை என்ற செய்தியும் மேலும் வலுவூட்டுவதாக அமைவதாக தெரிவித்தார்.

மக்களே அரசாங்கமும் சுகாதார அமைச்சும் கூறும் நடைமுறைகளை பின்பற்றுங்கள்இ நோய் தொற்று ஏற்பட்டாலும் அதனை கையாழ முடியும். மக்கள் பீதியடையாமல் அரசாங்கம் தற்போது கூறியுள்ள 'வீட்டிலிருந்து ஏழு நாள் வேலை செய்யுங்கள் இவ்வாறு செய்தால் வடமாகணத்தில் இந்த நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post